Map Graph

ராஞ்சி அறிவியல் மையம்

ராஞ்சி அறிவியல் மையம் இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள முதல் அறிவியல் காட்சியகம் ஆகும். சார்க்கண்டு அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சார்கண்டு மன்றத்தின் கீழ் உள்ளது. மூலதனச் செலவில் ராஞ்சி நகரை ஒட்டியுள்ள தாகூர் மலைக்கு அருகில் உள்ள சிரௌண்டி கிராமத்தில், சார்கண்டு அரசால் வழங்கப்பட்ட 13 ஏக்கர் நிலப்பரப்பில் 42,000 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று நிரந்தர கருப்பொருள் காட்சியகங்களைக் கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 87.5 கோடி அல்லது $1,374,494 செலவினை சார்கண்டு அரசும் இந்திய அரசும் சமமாகப் பகிர்ந்து கொண்டது. இந்த அறிவியல் மையத்தை தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை உருவாக்கியுள்ளது. இது இந்தியா அரசின் கலாச்சார அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும். இந்த மையம் 29 நவம்பர் 2010 அன்று முதல்வர் அருச்சுன் முண்டாவால் திறந்து வைக்கப்பட்டது.

Read article
படிமம்:Ranchi_Science_Centre_8731.JPGபடிமம்:Resources_of_Jharkhand_Gallery_-_Ranchi_Science_Centre_-_Jharkhand_2010-11-29_8878.JPGபடிமம்:Commons-logo-2.svg